Skip to main content

அம்மா அணி எனும் புதிய அமைப்பிற்கான அலுவலகம் திறப்பு - திவாகரன்

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

அமமுக தலைவர் டிடிவி.தினகரனுக்கும் அவரது உறவினர் திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை தொடர்ந்து அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது. 

இந்நிலையில் திவாகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணி எனும் அமைப்பையும் அதற்கான அலுவலகத்தையும் இன்று தொடங்கிவைத்துள்ளார்.

 

 

DIVAKARAN

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த  திவாகரன் பேசுகையில் 

 

இனி அம்மா அணி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன், விரைவில் சென்னையில் அம்மா அணிக்கான அலுவலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் விரைவில் ஒரு பத்திரிகையும் தொடங்க உள்ளோம். மன்னார்குடியில்இன்று திறந்துவைக்கப்பட்ட  அலுவலகம் அம்மா அணியின் மாநில அலுவலகமாக செயல்படும் என்றும் கூறினார். 

மேலும் அவர் டி.டி.வி தினகரன் சசிகலாவை கறிவேப்பிலை போலதான் பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்