Skip to main content

கடன் தொல்லை... கண்டிப்பு... ஐ.டி இளைஞரின் உயிரைப்பறித்த 'ஆன்லைன் ரம்மி'

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

online rummy incident in thirupathur

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

 

ஓய்வு நேரத்தில் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடிவந்துள்ளார். ஒருகட்டத்தில் பணம் கட்டி விளையாடத் தொடங்கியுள்ளார், அதில் பலலட்சம் ரூபாய் இழந்துள்ளார். நண்பர்கள், உறவினர்களிடம் பணம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.அதில் பெரியளவில் நட்டத்தை அடைந்துள்ளார். இதனால் வாங்கிய கடனை திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

கடன் தந்தவர்கள் பணத்தைக்கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். இது குடும்பத்தாருக்குத் தெரிந்து ஆனந்தனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். அப்படியும் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை விடவில்லையாம். அனைவரும் கண்டிப்பது அதிகமானது, கடன் தொல்லை போன்றவற்றால் அதிருப்தியான ஆனந்தன் அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இதனைப்பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியாகி அழுதுள்ளனர். இதுகுறித்த தகவல் வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி காவல்துறையினர் ஆனந்தன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து இந்த  சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்