Skip to main content

ஒன்றறை கிலோ மீட்டர் குளத்தைக் காணவில்லை... மீட்டுத் தரக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை! 

Published on 11/08/2020 | Edited on 11/08/2020

 

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா கன்னன்குளம் கிராமத்தில் குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தில் இருந்து பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அந்தக் குளத்தின் கரையைச் சிலர் பாழ்படுத்தி உள்ளார்கள். இதுதொடர்பாக சீலாத்திகுளம் கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்று கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் இந்தக் குளத்தில் இருந்து பாசன வசதி பெரும் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

 

ஒரு தனிநபர், குளத்தின் கரையை சுமார் ஒன்றறை கிலோ மீட்டர் அளவுக்கு சேதப்படுத்தியும் கற்களைக் கொண்டு நிரப்பியும் குளத்தின் உறுதித்தன்மையைக் கேள்விக்குறி ஆக்கிக்கொண்டு இருக்கிறார். தற்போது பருவமழை பொழிந்து வருவது தொடங்கிவிட்டது, இதனால் குளம் உடையும் ஆபத்து இருக்கிறது, இதனைக் கருத்தில்கொண்டு குளம் நிரம்புவதற்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னன்குளம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அரசு முறையான நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும், குளத்தைப் பாழாக்கும் நபர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கன்னன்குளம் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அதன் மூலம் அரசின் கவனத்தை ஈர்ப்போம் என்கின்றனர் கிராம மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்