Skip to main content

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை! (படங்கள்)

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று (05/12/2021) சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்த்தூவியும் மரியாதைச் செலுத்தினர்.

 

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர். 

 

பின்னர், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் 'அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என பகல் கனவு காண்போரின் சதியை முடியடிப்போம்' என்று உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்