Skip to main content

லாக்டவுன் வந்துடுமோ? - சென்ட்ரலில் குவிந்த வடமாநிலத்தவர்கள்!

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

Northerners gathered in Chennai Central

 

கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாடு அமலில் உள்ள போதும் கரோனா நோய்த் தொற்றின் பரவல் குறையவில்லை. இதன் காரணமாக தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி கரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு எனப் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று ஆணை வெளியிட்டுள்ளது.

 

கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால் தமிழகத்தில் வேலைக்காக வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். கடந்த முறை பொதுமுடக்க ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் பலரும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர். அத்துடன் அனைத்து வழிப் பயணங்களும் ரத்து செய்ததால் பலரும் சொந்தங்களைப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டனர். அந்தச் சமயத்தில் பல வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர். அதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

 

Northerners gathered in Chennai Central

 

பின்னர் தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரின் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு அரசின் சொந்தச் செலவில் பல தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோவை, சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய இடங்களில் பணிபுரிவதற்காக திரும்பி வந்தனர். மேலும் தற்பொழுது மறுபடியும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு என அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

 

பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் இன்று இரவு 7மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலில் செல்ல முன்பதிவு செய்தும், தட்கள் டிக்கெட் பெற்றும் வருகிறார்கள். மேலும் பலர் விண்ணப்பப் படிவங்களுடன் காத்திருக்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்