Skip to main content

வடகிழக்கு பருவ மழை எதிரொலி; 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Northeast Monsoon Echo; Holidays for schools in 8 districts

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழையைப் பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வரை 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கு முன்பே வானிலை ஆய்வு மையம், மழைப் பொழிவு நான்காம் தேதி வரை நீடிக்கும் என்றும் நவம்பர் 1 முதல் மழைப் பொழிவின் அளவு அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.  

 

இந்நிலையில், கனமழைக் காரணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்