Skip to main content

நிர்மலா தேவி வழக்கு - 30ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் கோர்ட் உத்தரவு

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்  கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, இந்த வழக்கை 30.01.2019க்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் மூன்று பேரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மூன்று பேரும் மதுரை மத்திய சிறைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

nirmala devi



நிர்மலா தேவிக்கு தேவையான பேஸ்ட், சோப் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவரது சகோதரர் கொடுத்து வந்தார். தற்போது அவர் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வருவதால் நிர்மலா தேவியை சந்திக்கவில்லை. மேலும் அவரது உறவினர்கள் யாரும் சிறையில் சென்று அவரை சந்திக்கவில்லை. பழைய சால்வையையே பயன்படுத்தும் நிர்மலா தேவி, பிளாஸ்டிக் பையில் இருந்து துணிப் பைக்கு மாறிவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்