Skip to main content

நீட் தேர்வில் மகன் வெற்றி பெற முடியாமல் போன காரணம்... கஸ்தூரி மகாலிங்கம் தாயார் பேட்டி

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
kasturi mahalingam



நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்று நீட்டுக்கு தந்தையை பலி கொடுத்த கஸ்தூரி மகாலிங்கம் 84 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்ற சம்பவம் கிருஷ்ணசாமியின் கும்பத்தினரை மேலும் சோகமடையவே செய்துள்ளது.

"என் மகன் நீட் தேர்வில் தோல்வியடைய மத்திய, மாநில அரசுகளே காரணம்" என்கிறார் கஸ்தூரி மகாலிங்கத்தின் தாய் பாரதி மகாதேவி.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். கடந்த மே 6ம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி அங்கேயே மாரடைப்பால் மரணமடைந்தார்.

 

 


தந்தை இறந்தது தெரியாமல் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்து, அப்பா எங்கே என்று தேடினார். தந்தை மாரடைப்பார் மரணம் அடைந்த செய்தி கேட்டு கதறினார். 

கிருஷ்ணசாமியின் இறப்பு தமிழகத்தையே போராட்ட களமாக மாற்றியது. கிருஷ்ணசாமியின் இறப்புக்கு வந்த அரசியல் பிரமுகர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். கிருஷ்ணசாமியின் இறப்புக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்றும், மகாலிங்கம் தோல்வி அடைந்தால் இரண்டு அரசுகளுமே பொறுப்பு என்றும் கூறினர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. கஸ்தூரி மகாலிங்கத்தின் தேர்வு முடிவு எதிர்ப்பார்க்கப்பட்டது. அவரோ 84 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.

 

 


கஸ்தூரி மகாலிங்கத்தின் தாய் பாரதி மகாதேவி கூறுகையில், "என்னோட மகன் தோல்வியடைய இரண்டு அரசுகளுமே காரணம். நீட் தேர்வு எழுத அண்டை மாநிலங்களுக்கு அனுப்பியதே முதற்காரணம். எனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதை என் மகன் கஸ்தூரிக்கு தெரிந்து தேர்வு எழுத போகவே மறுத்துள்ளான். கனத்த மனத்தோடு சென்றவனுக்கு தேர்வின் கவனத்தோடு தந்தையின் உடல்நிலையே மனதில் ஒடியிறுக்கு அதுதான் மகனின் தோல்விக்கு காரணம்" என்றார்.




 

சார்ந்த செய்திகள்