Skip to main content

“மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் எனது பயணம்” - வெ. இறையன்பு

Published on 30/06/2023 | Edited on 30/06/2023

 

“My journey with students and youth” - V.Irayanpu

 

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக செயல்பட்டு வந்த இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். அதனையொட்டி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமித்ததுள்ளது. இதேபோன்று தமிழக டிஜிபியாக பொறுப்பு வகித்த சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக டிஜிபியாக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஓய்வு பெற இருக்கும் வெ. இறையன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பேசிய அவர், “பணி ஓய்வுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்காலம் பற்றி நான் இதுவரையிலும் திட்டமிடவில்லை. முதலில் ஒரு மாத காலம் முழுவதும் ஓய்வில் இருப்பேன். அதன் பின்னர், சமுதாயம் என்னை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்றபடி செயல்படுவேன். சமுதாயம் எதை நோக்கி என்னைக் கொண்டு செல்கிறதோ அதை நோக்கி எனது பயணம் இருக்கும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் எனது பயணம் இருக்கும்” என்று கூறினார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு ஆகியோர் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையொட்டி இருவருக்கும் சால்வை அணிவித்தும், பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்