Skip to main content

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் அதிமுக பொதுக்குழு; இபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்த இந்திய தேசிய லீக்!

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

muslim League thanks EPS for AIADMK  Opposes General Civil Code

 

பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேசிய லீக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், கட்சி நிர்வாகிகளை அழைத்துச் சென்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய இல்லத்தில்  சந்தித்தார்.  

 

அப்போது,  ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படவிருக்கும் பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடியது என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலமாக நன்றி தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்திய தேசிய லீக் திமுக ஆதரவு கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்