Skip to main content

மன அழுத்தத்தில் இளையராஜா... ஸ்டூடியோவுக்கு வந்த கண்டெய்னர்! (படங்கள்)

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 


சென்னை பிரசாத் ஸ்டூடியோவிற்கு இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

பிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மேலும், பொருட்களை எடுக்கச் செல்லும்போது ஸ்டூடியோவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

இதையடுத்து இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவிற்கு இளையராஜா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனஅழுத்தம் காரணமாக இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவிற்கு வரவில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு தெரிவித்துள்ளார். இதனிடையே, இளையராஜா வரவில்லை என்றாலும் பொருட்கள் ஏற்றி அனுப்பப்படும். இளையராஜா பொருட்களை ஏற்றும் பணி இன்று மாலை வரை நடைபெறலாம் என கூறப்படுகிறது. 

 

அதேபோல் இசையமைப்பாளர் இளையராஜாவின் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இரண்டு கண்டெய்னர் லாரிகள் பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்தது. 

 

சார்ந்த செய்திகள்