Skip to main content

"இளையராஜா பயன்படுத்திய அறை தற்போது இல்லை"!- வழக்கறிஞர் சரவணன் பரபரப்பு பேட்டி... 

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

music composer ilayaraja lawyer pressmeet

 

பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா பயன்படுத்திய அறை தற்போது இல்லை என்று இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார். 

 

சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், "பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்தி வந்த அறை தற்போது இல்லை. இதனால் இளையராஜா மன வருத்தத்தில் உள்ளார். பத்மபூஷன் விருது, புகைப்படம் என முக்கிய விருதுகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன. இளையராஜா பயன்படுத்தி வந்த பொருட்கள் வேறு அறையில் குப்பைபோல் வைக்கப்பட்டிருந்தன. கணக்கெடுப்புக்கு பிறகே இளையராஜாவின் பொருட்கள் காணாமல் போனதா என தெரியவரும். எனது அறை இல்லையெனில் நான் எதற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இளையராஜா வரவில்லை. தனது அறையைப் பார்ப்பதற்காகத்தான் ஸ்டூடியோவிற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவதாகக் கூறியிருந்தார். சாவி தங்களிடம் இருக்கும்போது அறையின் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்துள்ளனர். இளையராஜாவுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்