Skip to main content

இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்றிய வாலிபர்!!!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
madurai police investigation


மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). இவருக்கு மதுரை தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில்  காதலாக மாறியது. விக்னேஷ் அந்த பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 


இந்த நிலையில் விக்னேஷ் அந்த மாணவியிடம் எனக்கு பணக்கஷ்டம் உள்ளது, எனவே நீ எனக்கு பணம் மற்றும் நகை கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அந்த கல்லூரி மாணவி, தான் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார்.

ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நிலையில், விக்னேஷ் அந்த நகை மற்றும் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். இது தொடர்பாக கல்லூரி  மாணவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷிடம் விசாரணை நடத்தினார்கள்.

 

 


அப்போது அவர் அந்த மாணவியிடம் நகை, பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்ற முயன்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து தெப்பக்குளம் போலீசார் விக்னேஷை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்