Skip to main content

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

minister ponmudi land case judgement

 

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சென்னை சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3650 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகிய மூவர் உயிரிழந்தனர். மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி ஜி.ஜெயவேல் இன்று வழங்கியுள்ள தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்