Skip to main content

“கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது” - அமைச்சர் மா.சு எச்சரிக்கை

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

  Minister ma Subramanian has said that incidence corona increasing Tamil Nadu

 

தமிழகத்தில் சமீபகாலமாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 1000 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது. 

 

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “இந்த முகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் எச்3என்2 காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவரும். அதன் பிறகு அந்த காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று 1000 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளோம். சமூக பரவல் ஆவதற்கு முன்பே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். 

 

நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு 2 பேருக்கும் மட்டுமே இருந்த தொற்று தற்போது 20க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. கட்டாயமாக்கினால்தான் முககவசம் அணிந்து கொள்வது என்பதை விட நம்முடைய பாதுகாப்புக்கு நலன் கருதி மக்கள் பொது  இடங்களில் முககவசம் அணிந்து கொள்வது நல்லது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்