Skip to main content

பதினெட்டும் நமதே;நாற்பதும் நமதே - அமைச்சர் ஜெயக்குமார்

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

சென்னை ராயப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்,

 

கூட்டணி உடன்பாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது எனவே அதனையடுத்து அறிவிப்புகள் தலைமை வெளியிடும். எங்களைப் பொறுத்தவரை இந்த அரசு இரு கண்கள் போன்றது அந்த இரு கண்களும் முழுமையான அளவிற்கு இருந்தால்தான் ஒரு மனிதனுடைய செயல்பாட்டை 100% கொண்டுவரும். மற்றொன்று பாராளுமன்ற தேர்தல் என்பது இதயம் எனவே ரத்த ஓட்டம் இருந்தால்தான் எல்லாமே செயல்படும். கண்களும், இதயமும் ரொம்ப முக்கியம். இதயம் பொருத்தவரையில் பாராளுமன்ற தேர்தல், கண்களை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தல்.  பதினெட்டிலும் வெற்றி பெறுவோம் நாற்பதிலும் வெற்றி பெறுவோம், நாடும் நமதே நாற்பதும் நமதே நாளை நமதே.

 

jayakumar

 

ராகுல் காந்தி அடுத்தவர் மீது குற்றம்சாட்டும் போது தன் மீதுள்ள குற்றத்தை கொஞ்சம் பார்க்க வேண்டும். பொதுவாக அவருடைய சகோதரியுடைய கணவர் வதேரா சொத்து சேர்த்த வழக்கில் அவர் இன்று மாட்டிக் கொண்டிருப்பதால் ஊழலில் எந்த அளவுக்கு காங்கிரசில் திளைத்திருக்கிறது என்பதை நிச்சயமாக மறந்துவிடவில்லை. தமிழ்நாட்டிற்கு ராகுல் வருவது ஒரு வெட்கக்கேடு, ஒரு சாபக்கேடு என சொல்ல வேண்டும். ஏனென்றால் 1 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒரு மாபாதகச் செயலை புரிந்த ஒரு கூட்டணி திமுக, காங்கிரஸ். இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமான தமிழினத்தையே இலங்கையிலேயே அழித்த  நிலை ஒவ்வொரு தமிழனும் மறக்க மாட்டான். எனவே ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து இருக்கின்றான் அதற்கான வெகுமதியை நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர்கள் அளிப்பார்கள் எனக் கூறினார்.

 

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை அரசு பண்ணியாச்சு, சிபிஐக்கு வழக்கை மாற்றியாயிற்று நம்முடைய சட்டமன்றத் துணை சபாநாயகர் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். எனவே இத்தனைக்கும் பிறகு முழுமை அளவிற்கு இந்த நேரத்தில் அரசியலாக்கப்படும் என்ற விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது. பாலியல் கொடுமை மனிதன் ஏற்றுக்கொள்ள முடியாத சமூக கொடுமை இதற்கு  முழுமையான அளவிற்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்