Skip to main content

மீனவர்கள் படுகொலையைக் கண்டித்து ‘மே 17 இயக்கத்தினர்’ போராட்டம்! (படங்கள்)

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொல்லப்படும் சம்பவம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து ஒரு படகில் மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

 

அப்போது 18ஆம் தேதி அதிகாலை அந்த பகுதியில் வந்த இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களின் மீன்பிடி படகை இடித்து படகினை மூழ்கடித்து உள்ளனர். இதில் சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் ராஜ்கிரண் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. பிறகு ராஜ்கிரண் இறந்தது தெரியவந்தது; கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் ராஜ்கிரணின் உடலை ஒப்படைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், மீனவர் ராஜ்கிரணின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் படுகொலையைக் கண்டித்து ‘மே 17 இயக்கம்’ சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைதாகினர். இலங்கை தூதரகம் முன்பு தொடர்ந்து பரபரப்பான நிலை உள்ளதால் பாதுகாப்பிற்காக அதிக போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்