Skip to main content

100வது பிறந்தநாளில் மீண்டும் டும்டும்டும்... முதியவருக்குக் குவியும் வாழ்த்து!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

jkl


தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்ட முதியவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் பிஸ்வானந்த் சர்கார். இன்று அவருக்கு நூறாவது பிறந்த தினம். இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவு செய்த அவர், மேள தாளங்கள் முழங்க, 50க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடினார். இந்த விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக தன்னுடைய மனைவிக்கு மீண்டும் ஒரு முறை மாலை மாற்றி, தாலி கட்டினார். பேரக்குழந்தைகள் 500 ரூபாய் தாள்களில் ஆன மாலையை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தனர். மேலும் கிராமத்தில் உள்ள அனைவருக்கு சிக்கன் பிரியாணி போட ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது அந்த ஊரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்