Skip to main content

திருச்சியில் பீகாரைச் சேர்ந்தவர் மரணம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Man from Bihar passed away in road accident in Trichy

பீகார் மாநிலம் கட்டுக்காரா பகுதியைச் சேர்ந்த சிவாராயன் ஹாவ் மகன் தர்மேந்திரா ஹாவ் (28). இவர் திருவெறும்பூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் (ஐடிஐ) நடந்து வரும் கட்டடப்பணிகளில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை(14.5.2024) இவர், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, திருவெறும்பூரிலிருந்து துவாக்குடி நோக்கிச் சென்ற கார் ஒன்று அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தர்மேந்திரா ஹாவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், சமபவ இடத்திற்கு சென்று  தர்மேந்திரா ஹாவ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்