Skip to main content

மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றக் கிளை!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

madurai high court bench order pudukkottai child incident police investigation

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. 

 

புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்கிற ராஜா, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

 

இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாமிவேலுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சாமிவேலுக்கு விதிக்கப்பட்டத் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதி செய்ய புதுக்கோட்டை காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரி என்று வாதிட்டு, அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இதனையேற்ற நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை நடத்தியே மரணத் தண்டனை விதித்துள்ளதாகக் கூறி, தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். 

 

சார்ந்த செய்திகள்