Skip to main content

கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் செல்லும் போலீஸ்... மதுரையில் பரபரப்பு...    

Published on 17/05/2020 | Edited on 17/05/2020

    

madurai city



கடந்த 40 நாட்களும் தமிழகம் முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் தற்போது தான் 32 வகையான கடைகள் இரவு 7 மணி வரை திறக்க அரசு சில நிபந்தனையுன் உத்தரவிட்டு சிறு சிறு கடைகள் திறந்திருந்த  நிலையில், காவல்துறை தொடர்ச்சியாக ஆங்காங்கே கண்காணித்து ஏழு மணி தாண்டி ஒரு நிமிடம் காட்டினாலும் அதை எதிர்பார்த்து கடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்து கடை அடைப்பதற்க்கு முன் உள்ளே நுழைந்து மணி 7 ஆகிவிட்டது, இன்னும் கடையை அடைக்காம இருக்கீங்க என்று சொல்லிக்கொண்டே  அங்கு இருக்கும் செல்போன் மற்றும் சில விலையுயர்ந்த பொருட்களை எடுத்து எடுத்துக்கொண்டு நீங்க காவல் நிலையத்துக்கு நிலையத்துக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என சென்று விடுகின்றனர்.
 

கடைக்காரர்கள் எவ்வளவோ மன்றாடியும் தங்களது பொருட்களை கொடுக்க மறுத்து போய்விடுகின்றனர். வியாபாரிகள்  இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் காத்து கிடந்து 1500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு அதற்க்கு ரசீது கேட்டவர்களை அடித்தும் விரட்டியுள்ளார்கள். ''இது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த கரோனா சமயத்தில் எந்தவித வியாபரமும் இல்லாமல் பொருளாதார கஷ்டத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது'' என வியாபாரிகள் அனைவரும் புகார் தெரிவித்துள்ளார்கள்.
 

இது குறித்து புதூர் வியாபாரிகள் சங்க செயலாளர் திரவியம், ''மக்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் மருந்து தவிர வேறு பொருட்களை யாரும் வாங்க முன்வருவதில்லை. அப்படியிருக்கும்போது வியாபாரிகளின் உடமைகளை கொண்டு செல்வது அவர்களை தகாத வார்தைகளில் திட்டுவது, மேலும் அபராதமாக 1600 வசூலிப்பது என்பது மிகவும் மனவேதனையை தருகிறது'' என்றார். இது அனைத்து வியாபாரிகளிடமும் அச்சத்தையும் கோபத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்