Skip to main content

லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த இளைஞர்! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

lorry and bike youth incident police investigation

 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார். 

 

சானிடோரியம் சித்தா மருத்துவமனை அருகே இரும்புலியூரைச் சேர்ந்த ஜோதிக்குமார் என்ற இளைஞர், புதிய சாலைப் போடுவதற்காக ஏற்கனவே சுரண்டப்பட்டிருந்த சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியது. இதில் லாரி அடியில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

 

லாரி ஓட்டுநர் மூர்த்தி, கிளீனர் கார்த்திக் ஆகியோர் தப்பியோடிய நிலையில், உயிரிழந்தவரின் உடலை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்