Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்- வெற்றி பெற்றவர்களின் விவரம்!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (02.01.2020) காலை 08.00 மணி தொடங்கிய நிலையில், விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 


உள்ளாட்சித் தேர்தல்- வெற்றி பெற்றவர்களின் விவரம் (05.35AM). 

மதுரை: திருப்பரங்குன்றம் ஒன்றியம் 22- வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி- 13, அதிமுக கூட்டணி- 9 இடங்களில் வெற்றி.

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் 15- வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் இந்திரா வெள்ளைசாமி வெற்றி. 

திருப்பூர் அவிநாசி ஒன்றியம் 2- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக அதிமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி. 

LOCAL BODY ELECTION WINNING CANDIDATES DETAILS


விருதுநகர்: அருப்புக்கோட்டை ஒன்றியம் 14- வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் உதயசூரியன் வெற்றி.

விருதுநகர்: காரியாபட்டியில் 11- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுகவின் தங்க தமிழ்வாணன் வெற்றி. 

மதுரை: மேலூர் ஒன்றியம் 7- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் ராஜீபாலா வெற்றி. 

சேலம்: காடையாம்பட்டி ஒன்றியம் 6- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக திமுக வேட்பாளர் வசந்தி முருகன் வெற்றி. 

திருவள்ளூர் ஒன்றியம் 7- வது வார்டு மாவட்ட கவுன்சிலராக சித்ரா வெற்றி. 

ராமநாதபுரம்: கமுதி ஒன்றியம் 14- வது வார்டு- கவிதா (திமுக), 19- வது காளீஸ்வரி (திமுக) வெற்றி. 

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்தில் 12, 13- வது வார்டில் திமுகவின் டில்லிக்குமார், கன்னியப்பன் வெற்றி. இதே ஒன்றியத்தில் 14, 15- வார்டில் அதிமுகவின் கண்ணன், கவுதமன் வெற்றி. 

சிவகங்கையில் மொத்தமுள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக, அதிமுக தலா 8 இடங்களில் வெற்றி.




 

சார்ந்த செய்திகள்