Skip to main content

பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்... கிராம மக்கள் 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Let's boycott the parliamentary elections... Villagers

 

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி. குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொண்டான் துளசி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகிறார்கள். அதே கிராமத்தில் பஞ்சமி நிலம், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. ஆதிதிராவிட மக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக சொந்த வீடு இன்றி அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

சிலமாதங்களுக்கு முன்பு கே.வி.குப்பம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்ததில் தொண்டான் துளசி கிராமத்துக்கு நேரில் வந்த வட்டாட்சியர், உடனடியாக தகுதி வாய்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து சென்றார். அந்த வட்டாட்சியர் மாற்றப்பட்டு, தற்போது புதிய வட்டாட்சியர் பதவி ஏற்று உள்ளார்.

 

இந்த வட்டாட்சியரிடம் தகவலை தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம பெரியோர்கள், பொது மக்களை ஒன்று திரட்டி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமைதியான முறையில் நவம்பர் 1 ஆம் தேதி காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்தனர்.  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வழங்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்