Published on 09/07/2021 | Edited on 09/07/2021
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பட்டிமன்றப் பேச்சாளரும், திமுகவின் நிர்வாகியுமான திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ''பட்டிமன்றம் என்ற போர்வையில் பெண்களை இழிவாக பேசுவதையும், நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களை இழிவான முறையில் விமர்சிக்கவும் செய்யக் கூடியவர் லியோனி. நல்ல கருத்துக்கள் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் லியோனியின் நியமனத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.