Skip to main content

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் 

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
Kurinjipadi


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் வசித்து வந்தவர் ஜோதி. இவரது கணவர் மாயவேல். ஜோதிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் புறவழிச்சாலை பகுதியில் குடியிருக்கும் மாய வேலை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். மாயவேலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவி ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு போதையில் வந்த மாயவேல் மனைவி ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாயவேல் ஜோதியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் ஜோதி மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயவேல் அவரை சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சேர்த்துள்ளார்.

 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் ஜோதியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஜோதி தாக்கப்பட்டதால் இறந்ததாக கூறப்பட்டது. அதன்பேரில் சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து மாயவேலை கைது செய்து செய்துள்ளனர் குறிஞ்சிப்பாடி போலீசார். 

 

 

 

சார்ந்த செய்திகள்