Skip to main content

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஐந்து பேரிடம் விசாரணை! 

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Kodanadu murder, robbery case; Five people are under investigation!

 

கொடநாடு வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் 5 பேரிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திபு, ஜம்ஷீர் அலி, சதீஸன், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய் ஆகிய 5 பேரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் தனிப்படை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு தொடர்பாக தற்போது வரை 150 பேரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வழக்கும் முக்கிய குற்றவளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 12 பேரில் விபத்தில் பலியான கனகராஜ் உறவினர்களான சேலத்தை சேர்ந்த தனபால், ரமேஷ் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 9 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் விசாரணை நடைபெறும் கோவை காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்