Skip to main content

கிசான் திட்டம் முறைகேடு... திருவாரூரில் 3 ஊழியர்கள் பணிநீக்கம்!  

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Kisan scheme.. 3 employees laid off in Thiruvarur

 

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மூன்று ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முத்துப்பேட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர், நன்னிலம்- கொரடாச்சேரி உதவி மேலாளர்கள் இருவர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற 2,383 பேரிடம் இருந்து இதுவரை 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கிசான் திட்டம் முறைகேடு விவகாரத்தில் இன்னும் 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்