Skip to main content

என்ஐடி பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்ட கண்ணபிரான்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Kannapiran takes responsible over as NIT Director

 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநராக கடந்த ஐந்து ஆண்டு காலம் பணியாற்றிய மினி ஷாஜி தாமஸ் பணிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து டில்லி பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் சென்றார். இதனை தொடர்ந்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பொறுப்பு இயக்குநராக முனைவர் கண்ணபிரான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.

 

நேற்று அவர் திருச்சி என்ஐடி பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஏற்கனவே திருச்சி என்ஐடியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். தற்போது வரை திருச்சி  என்ஐடி இயக்குநராக இந்திய அரசின் உயர் கல்வித்துறை நியமித்துள்ளது. இவர் காமன்வெல்த் மற்றும் பிரிட்டிஷ் கல்வி மையம் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

 

கணினி பொறியியல் துறை, சைபர் கிரைம், தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி உள்ளார். அதே போல் சர்வதேச பத்திரிக்கைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் சம்பந்தமாக இவர் எழுதிய 70 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் தொழில் நிறுவனங்கள் தொழில் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான இணைப்புப் பாலமாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்