Skip to main content

தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய கனிமொழியின் மனு! -உத்தரவு தள்ளிவைப்பு!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்குத் தள்ளிவைத்துள்ளது.

 

  kanimozhi Petition to reject election case

 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளர் சந்தான குமார், தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் சந்தானகுமார் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை நாளை தாக்கல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி,  தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரிய கனிமொழியின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்து, விசாரணையைத் தள்ளி வைத்தார்.
 

சார்ந்த செய்திகள்