Skip to main content

கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை அமைக்க காமராஜர் பிறந்தநாளில் உறுதியேற்போம் - ராமதாஸ் 

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

On Kamaraj's birthday, we will commit ourselves to establish a better Tamil Nadu in education - Ramadoss

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று (15.07.2021) கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளில் அவரை போற்றி பாமக நிறுவார் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

அதில், “பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 119வது பிறந்தநாள். ஏழைகளுக்கு மறுக்கப்பட்ட கல்வியை மீட்டெடுத்துக் கொடுத்து, படிக்கும் சமுதாயத்தை அமைக்க அடித்தளம் அமைத்துக்கொடுத்த மாபெரும் மக்கள் தலைவரை இந்த நன்னாளில் வணங்குவோம்.. போற்றுவோம்!

 

கல்வியில் சிறந்த தமிழகத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் காமராஜரின் நோக்கம். சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் கொள்கை. இவை இரண்டும் நிறைவேற வேண்டும்!

 

கல்வியில் சிறந்த தமிழகத்தை படைப்பதும், அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை கட்டாயமாக வழங்குவதும் பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே சாத்தியம். அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக உழைக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக்கொள்வோம்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்