Skip to main content

“தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார்..” - கமல்ஹாசன்

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Kamal Hasan condolence to piraisoodan

 

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (65) நேற்று (08.10.2021) சென்னையில் மாரடைப்பின் காரணமாக காலமானார். தமிழ்த் திரையுலகில் சுமார் 1,400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பிறைசூடன்.  இவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

 

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்