Skip to main content

“எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்..” -மக்களுக்கு அழைப்பு விடுக்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

K. T. Rajenthra Bhalaji


சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணப்பேரி கிராமத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கிராம மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். அப்போது, பொது மக்களிடையே பேசினார். 
 


“அரசைத் தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி, உதவிகள் செய்வதற்காக மக்களை நோக்கி அரசே செல்கிறது. அந்த அடிப்படையில்தான், இந்த கிராமத்திற்கு நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். நாங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்போம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். குறைகளைக் கூறலாம்.” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்