Skip to main content

திமுகவுக்கு தலைமை  தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை! அமைச்சர் சீனிவாசன் பேச்சு!!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019


திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை என திண்டுக்கல்லில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறினார்.

 

sr


.

முன்னாள் முதல்வர் ஜெ. வின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக அரசின் சாதனை‌ மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அதற்கான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில்  நடந்தது.       இக்கூட்டத்திற்கு வருவாய் துறை மற்றும் ஜெ. பேரவையின் மாநில செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஜெ. பேரவை செயலாளர்  ராஜன் அனைவரையும் வரவேற்றார்.   இக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,  ஜெ. பேரவையின் மாநில இணைச்செயலாளர்  கண்ணன்.,  தேனி மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரவீந்திரநாத், அதிமுக மாவட்டச் செயலாளர் மருதராஜ்,  வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம்,  சீனிவாசா ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன்  உள்பட  ஜெ. பேரவையின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டும் பேசினார்கள்.


 
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசும்போது.... வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது நடத்திவரும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதியோர்களுக்கு ஓய்வூதிய தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் திமுக தலைமையில் 5 முறை ஆட்சி நடந்தபோது கட்சிக்கு வேண்டியவர்கள் வெளிநாட்டிலிருப்பவர்கள் வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கு அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்பட்டது.   இது குறித்து சட்ட சபைக் கூட்டங்களில் அதிமுக ஆதாரத்துடன் அறிவித்தது.  ஆனால் அதிமுக ஆட்சியில் இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.   மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான நிதியுதவியாக 2000 வழங்கப்படுகிறது. எனவே பாடுபடுபவர்கள் யார் பாசாங்கு செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

 

s


.   இறுதியாக இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... தமிழக மக்கள் மனதில் கடந்த 40 ஆண்டு காலமாக அதிமுக இடம் பிடித்துள்ளது.  ஆனால் அதிமுக  ஆட்சிக்கு முடிவு வரும் நாட்கள் அதன் நிர்வாகிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி வருகிறார்.  ஆனால் திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.  எனவே திமுகவுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க. ஸ்டாலினுக்கு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததையும்,  கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடக்காமல் போன காரணத்திற்கும் மு. க ஸ்டாலின் கூறுகிறார்.  ஆனால் தேர்தலை நடத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்தது திமுக தான்.  அதனால் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வில்லை.  அது போல் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு கஜா புயலை காரணம் காட்டி தடை வாங்கிவிட்டனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொலை குற்றவாளி என காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். ஆனால் அது நடக்காது என்று கூறினார்.

  
இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருமாறன் உள்பட மாவட்ட நகர ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்