Skip to main content

''அதன் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது எனத் திட்டமிட்டுள்ளனர்'' - வைகோ கண்டனம்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

 '' Its contents are planned not to be known to Tamils ​​'' - Vaiko condemned

 

இந்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாகப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

 

அசாமி, மராத்தி உள்ளிட்ட இந்தியாவின் 17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை அவ்வப்போது பிரதமர் மோடி புகழ்ந்து வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ''புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது எனத் திட்டமிட்டு, புதிய கல்விக் கொள்கைக்கான தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. புதிய கல்விக் கொள்கை தமிழருக்கு எதிரானது என்பதால் திரவிட இயக்கங்கள் எதிர்க்கின்றன'' என வைகோ கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்