Skip to main content

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்... குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

 The issue of sale of girl's eggs....Children's Rights Protection Commission investigates!

 

அண்மையில் ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 16 வயது சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, இடைத்தரகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியின் தாய் அவரது மகளுக்கு 3 வயது இருக்கும் போதே கணவனைப் பிரிந்து சையத் அலி என்ற பெயிண்டர் உடன் வாழ்ந்து வந்துள்ளார். சிறுமி 12 வயதில் பருவமடைந்த உடனே கருமுட்டை விற்பனைக்குப் பயன்படுத்தியுள்ளார். வளர்ப்புத் தந்தை சையத் அலி சிறுமியின் தாய் துணையுடன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும், கருமுட்டையை விற்பனை செய்ய உதவியதும் தெரிய வந்தது. இப்படிப் பல வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கருமுட்டையைத் தனியார் மருத்துவமனையில் விற்பனை செய்வதை இவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

 

 The issue of sale of girl's eggs....Children's Rights Protection Commission investigates!

 

ஒவ்வொரு கருமுட்டை விற்பனையின் பொழுதும் 20 ஆயிரம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இடைத்தரகராகச் செயல்படும் மாலதிக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். கருமுட்டையைக் கொடுத்து பணம் பெற ஏதுவாக சிறுமியின் வயதை 20 எனக் காட்ட, போலி ஆதாரத்தையும் உருவாக்கியுள்ளனர். இப்படி 8 முறை கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில்  தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில மருத்துவமனைகளிலும் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்டிருக்கலாம் என விசாரணை வெளி மாநிலங்களுக்கும் நீண்டுள்ளது .தற்பொழுது விசாரணை அறிக்கையை மருத்துவக்குழு அரசுக்கு கொடுத்துள்ளது.

 

 The issue of sale of girl's eggs....Children's Rights Protection Commission investigates!

 

இந்தநிலையில் இன்று இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தினர் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் மல்லிகை, துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கொண்ட குழு ஈரோட்டில் மாவட்ட மருத்துவர்கள், காவலர்கள் உள்ளிட்டோரிடம் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்