Skip to main content

சமம் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா  விளையாட்டுப் போட்டிகள்

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
samam

புதுக்கோட்டை கலீப்நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் இயக்கம் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழாவையொட்டி பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்விற்கு சமம் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.உஷா நந்தினி தலைமை தாங்கி அவர் பேசியதாவது :  “ பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். கல்வித்துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார்கள். ஆனால் குடும்பம் என்று வந்தவுடன் வீட்டிற்குள் முடங்கிவிடுகிறார்கள். அதிக  மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். 

பெண்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாகப் பேசவும்,பெண்களின் பங்கேற்பை உறுதிப் படுத்தவும், பெண்களின் பணிகளை பாராட்டவும், அவர்களை பாதுகாக்கவும் அனைவரும் முன்வரவேண்டும். மேலும் இதுபோன்ற பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கிடையே உள்ள தயக்கத்தை உடைக்க முடியும் என்றார். கிளைச் செயலாளர் வித்யா வரவேற்றுப்பேசினார்.  போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத்தலைவர் அ.மணவாளன் பரிசு வழங்கினார். மாவட்டச்செயலாளர் எம்.வீரமுத்து வாழ்த்துரை வழங்கினார். கிளைப்பொறுப்பாளர்கள் சிந்து, பூங்கொடி, சித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பெண்களும், 40க்கும் மேற்றப்பட்ட துளிர் இல்லக்குழந்தைகளும் கலந்துகொண்டனர்.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.