Skip to main content

போலீஸ் வேனில்  இன்ஸ்டா  ரீல் - அலேக்காக தூக்கிய போலீசார்!  

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

police van

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காவல் துறை வாகனத்தில் ஏறி இன்ஸ்டா ரீல் செய்ததால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள்   விக்னேஷ் மற்றும் சஞ்சய். இவர்கள் தங்களது நண்பர்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டனர் . அதில் வீடியோவில் அவர்கள் காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி வீடியோவை பதிவு செய்திருந்தனர். இதன் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள்  இருவரும்  தங்களது நண்பர்களுடன் இணைந்து இத்தகைய செயல்களை தொடர்ந்து செய்து வந்தது தெரிய வந்துள்ளது.   விசாரணையின் முடிவில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை புழல்  சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளத்தில் இத்தகைய வன்முறையை தூண்டும் படி  ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்