Skip to main content

"தமிழை இனி யார் 'காப்பான்'..? சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...  

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' திரைப்படம் நேற்று வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
 

kaappan

 

 

கடலூர் மாவட்டம் புவனகிரியில் நேற்று திரைப்படத்திற்கு சென்ற கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றனர். அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, "முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது, திரையரங்கில் பேனர் வைக்க கூடாது என்று அறிவுரை கூறியதோடு, இனிமேல் அப்படி செய்யமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறியிருக்கிறார்.
 

கடிதம் எழுதிய 6 பேரும் தமிழை தப்பும் தவறுமாக எழுதிக் கொடுத்துள்ளனர். அதில் ஒரு மாணவன் ஆய்வாளர் என்பதை 'ஆவ்யாளர்'னு எழுதிருக்கான்.  "மனச திடப்படுத்திக்கிட்டுத்தான் அதை படிச்சேன். படிக்கும்போது துக்கம் தொண்டையை அடைச்சது. என தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பேத்கர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த கடிதம் எழுதிய 6 பேரும் கல்லூரி படிக்கின்ற மாணவர்கள். இப்படியே நிலைமை போனால் யார் 'காப்பான்' இவர்களையும் இவர்களின் தமிழையும் ...?" என்று வினவியுள்ளார் ஆய்வாளர் அம்பேத்கர்.

 

சார்ந்த செய்திகள்