Skip to main content

திருவண்ணாமைலை ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு!

Published on 23/02/2018 | Edited on 23/02/2018
scan


திருவண்ணாமலையில் இன்று 3க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்களில் திடீரென சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த ஸ்கேன் சென்டர்களில் சட்ட விதிகளை மீறி கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா? என கண்டறிந்து சொல்வது, சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வது உட்பட தேவையற்ற நிலைகளிலும் பணத்திற்கு ஆசைப்பட்டு ஸ்கேன் செய்ததது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுபற்றி, தமிழக சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மத்திய சுகாதாரத்துறைக்கு புகார்கள் சென்றன. அதனைத்தொடர்ந்து, கடந்த மாதம் மத்திய சுகாதரத்துறை இணைச்செயலாளர் தலைமையில் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதில் தீபம் ஸ்கேன் சென்டர் உட்பட 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டன. கருகலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் செல்வாம்மாள் மீது புகார் தரப்பட்டது. அவர் இதுவரை தலைமறைவாக உள்ளார். அவரது புவனேஸ்வரி மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரத்தில் இன்று 7க்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் மாவட்டத்தலைவர் மருத்துவர் அனுராதாவின் எஸ்.எஸ்.மருத்துவமனையில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, மற்ற ஸ்கேன் சென்டர்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

- ராஜா

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்... ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தரிசனத்திற்கு கட்டுப்பாடு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

tiruvannamalai district, annamalaiyar temple peoples

 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் தரிசனம் செய்ய இன்று (19/09/2020) முதல் அடையாள அட்டை அவசியம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசிக்கலாம் என்றும், சனிக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு 600 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை அடையாள அட்டையுடன் காண்பித்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என கூறியுள்ளது. 

 

 

Next Story

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் பழனிசாமி!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

review meeting cm palanisamy in tiruvannamalai collector office

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் தமிழக முதல்வர் பழனிசாமி. 

 

அதைத் தொடர்ந்து ரூபாய் 52.59 கோடி மதிப்பில் நிறைவுற்ற, 31 பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, ரூபாய் 19.20 கோடி மதிப்பிலான 11 திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

review meeting cm palanisamy in tiruvannamalai collector office

 

பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.