Skip to main content

கரோனா பரவல்: ஒரே நாளில் 25 போலீஸ் அதிகாரிகளுக்கு தொற்று

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

 Infection of 25 police officers in a single day

 

கரோனா மூன்றாவது அலை நாடு முமுவதும் பல மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அந்தந்த மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டியிருப்பதுடன் ஒரு சில மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 சதவிகித ஊழியர்களுடன் பணிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திலும் வேகமாகப் பரவும் கரோனா, குமரி மாவட்டத்தில் உச்சத்தைத் தொட்டு வருகிறது.

 

இதில் கடந்த டிசம்பர் மாத இறுதி வரையில் தினமும் 15 பேருக்கு பாதிப்பு என்றியிருந்த நிலை மாறி தற்போது தினமும் 1500-ஐ தொட்டு வருகிறது. இதனால் பரவலைத் தடுக்கும் விதத்தில் மாவட்ட நிா்வாகமும் சுகாதாரத்துறையும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று (21-ம் தேதி) பாிசோதனை செய்ததில் முன் களப்பணியாளர்களாக உள்ள 25 போலீஸ் அதிகாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயுதப்படை டிஎஸ்பி, தக்கலை டிஎஸ்பி, மற்றும் 8 ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளார்கள் அடங்குவார்கள்.

 

மேலும் பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார அதிகாரி உட்பட பல சுகாதார ஆய்வாளா்களுக்கும் கரோனா தொற்று பரவி உள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில் முன் களப்பணியாளர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மற்றவர்களும் பாதுகாப்போடு பணி செய்ய வேண்டுமென்று சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்