Skip to main content

''என் அக்காகிட்டயே இப்படித்தான் நடந்துகொள்வாயா...?'' -ஒருதலைக் காதலை எச்சரித்த மனைவி கடப்பாரையால் தாக்கி கொலை

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

incident in thirupathur... police investigation

 

திருப்பத்தூரில் மனைவியின் சகோதரியை ஒருதலையாகக் காதலித்து வந்த கணவனை மனைவி தட்டிக்கேட்டதால் மனைவியைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள்-துர்காதேவி தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது ஊரில் நடக்கும் கிடா வெட்டு திருவிழாவிற்கு மனைவியின் குடும்பத்தாரை அழைக்க பெருமாள் குடும்பத்துடன் மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது மாமியார் வீட்டுக்குச் சென்ற வேகத்தில் பெருமாள் மனைவியின் சகோதரியை வீடு முழுவதும் தேடி உள்ளார். இதனால் கோபமடைந்த பெருமாளின் மனைவி துர்கா, பெருமாளைப் பார்த்து கோபம் அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தாய் வீட்டிலேயே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் அருகிலிருந்த கடப்பாரையை எடுத்து மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

incident in thirupathur... police investigation

 

இதில் பலத்த காயமுற்ற துர்காதேவியை மீட்டு திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே துர்காதேவி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பத்தூர் கிராமிய போலீசார் தப்பி ஓடிய பெருமாளைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், பெருமாள் தனது மனைவியான துர்காதேவியின் அக்கா முல்லைக்கொடியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனால் மனைவிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ''என் அக்காகிட்டயே இப்படித்தான் நடந்துகொள்வாயா'' எனக் கடும் வாக்குவாதத்தில் துர்காதேவி ஈடுபட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில்தான் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் போலீசார்.

 

 

சார்ந்த செய்திகள்