Skip to main content

முந்திரி தோப்பில் 4 வயது சிறுவனின் சடலம்... இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை!

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Incident in cuddalore

                                                கோப்புப்படம் 

கடலூர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுவன் முந்திரிக்காட்டில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள கீழக்கொல்லை  கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். லாரி டிரைவரான செந்தில்நாதனுக்கு அஸ்வின் என்ற 4 வயது மகன் இருக்கிறான். நேற்று மாலை அஸ்வின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக பெற்றோர்கள் தேடியுள்ளனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செந்தில்நாதனும் அவரது மனைவி தனலட்சுமியும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் தரப்பிலும் சிறுவனைத் தேடிவந்த நிலையில், அதே கிராமத்தில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் அஸ்வின் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ந்தனர். சிறுவனின் முகத்தில் காயங்கள் இருந்ததால் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் அஸ்வினை நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகள் ரஞ்சிதா அழைத்துச் சென்றதாக தகவல் தெரிய வர, ரஞ்சிதாவை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்