Skip to main content

மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
jeeyar


ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.

பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் 2வது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு எஸ்.ராஜேந்திரன் என்பவர் அனுப்பியுள்ளார். அதில், எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜீயர் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர்,

எனக்கு வந்த கொலை மிரட்டலை ஆண்டாளும், அரசும் பார்த்துக் கொள்வார்கள். மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜீயரை கைது செய்க... சென்னை, மன்னார்குடியில் திகவினர் போலீசில் புகார்!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

 Arrest jeeyar ... Complain to police in Mannargudi, Chennai!

 

மதக்கலவரத்தை உருவாக்கும் வகையில் மன்னார்குடி ஜீயர் பேசி வருவதாக திராவிட கழகத்தினர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது என மதுரை ஆதீனம்  ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுக்கள் எழுந்துள்ளது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்திருந்த மன்னார்குடி ஜீயர், ''பட்டண பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை இந்த அரசாங்கத்திற்கும் கிடையாது, எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் பண்ணக்கூடிய ஒரு பணி. அதை செய்தே தீருவார்கள். நான் மன்னார்குடி ஜீயராக சொல்கிறேன் இந்த மாதிரி தர்ம துரோகிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறோம். இந்து விரோதமான செயல்கள், இந்து தர்மத்தில் தலையீடு செய்தால் அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் நடமாட முடியாது ரோட்டில்''என்றார்.

 

 Arrest jeeyar ... Complain to police in Mannargudi, Chennai!

 

இந்த பேச்சு வைரலான நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத்தினர் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்திலும், மன்னார்குடி காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், 'மன்னார்குடி ஜீயர் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவருவதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 Arrest jeeyar ... Complain to police in Mannargudi, Chennai!

 

அதேபோல் சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகாரில், 'மன்னார்குடி ஜீயர் வன்முறையையும், கலவரத்தையும் தூண்டும் வகையில் சட்ட ஒழுங்கையும், பொது ஒழுங்கையும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார். பொதுமக்களால் தேர்வுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் பேசிய ஜீயர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

''அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் ரோட்டில் நடமாட முடியாது...''-மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

'' Ministers cannot walk on the road ... '' - Mannargudi zealot warns!

 

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் மதுரை ஆதீனம்  ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளது. அதிலும் , "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்'' என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

SAINT

 

பட்டின பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது எனவே அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பட்டண பிரவேசம் என்பது சம்பிரதாயத்தில் இருக்கக்கூடியது. இதே மாதிரிதான் ஸ்ரீரங்கத்தில் கூட ஒரு ஆச்சாரியாருக்குப் பட்டின பிரவேசம் செய்யும் போது இந்த மாதிரி செய்தார்கள். பட்டண பிரவேசத்தைத் தடுக்கக்கூடிய அருகதை இந்த அரசாங்கத்திற்கும் கிடையாது, எந்த ஒரு இயக்கத்திற்கும் கிடையாது. அது நம்முடைய சிஷ்யர்கள் பண்ணக்கூடிய ஒரு பணி. அதை செய்தே தீருவார்கள். நான் மன்னார்குடி ஜீயராக சொல்கிறேன் இந்த மாதிரி தர்ம துரோகிகளுக்கும், தேச துரோகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையும் கொடுக்கிறோம். இந்து விரோதமான செயல்கள், இந்து தர்மத்தில் தலையீடு செய்தால் அரசாங்கத்தில் எந்த ஒரு அமைச்சரும், எம்.எல்.ஏவும் நடமாட முடியாது ரோட்டில்''என்றார்.