Skip to main content

''நான் வெளியே வந்ததற்கான காரணம் இதுதான்...'' - இளையராஜா பதில்! 

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

 '' I came out to have that studio on the missing list '' - Ilayaraja

 

பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட மோதல்களை அடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா, இன்று (03.02.2021) புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்தார்.

 

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ இன்று திறக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை ஒலிப்பதிவு செய்தார். வடபழனியில் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால், இந்தப் புதிய ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கியுள்ளார். பல ஆண்டுகளாக தனது படத்தின் பாடல் பதிவு மற்றும் இசைக்கோர்ப்புப் பணிகளை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில்தான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று புதிய ஸ்டுடியோவை துவக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், ''தமிழகத்தில் நான்கு மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க்கொண்டிருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என நான்கு மொழிப் படங்களும், அவ்வப்போது ஹிந்தி படங்களும் தயாராகி வெளியே சென்றுகொண்டிருந்தது. இங்கே இருந்த ஸ்டூடியோ எங்கேயும் இல்லாமல் இருந்தது. விஜய வாகினி ஸ்டுடியோ ஆசிய கண்டத்திலேயே பெரிய ஸ்டுடியோ. அந்த ஸ்டூடியோவை இன்று காணவில்லை.

 

ஜெமினி ஸ்டூடியோ, நெப்டியூன், சாரதா ஸ்டூடியோ, கோல்டன் ஸ்டூடியோ, ஏவிஎம் ஸ்டூடியோ, விஜயா கார்டன் இப்படி எல்லா ஸ்டூடியோக்களும் காணாமல் போய்க்கொண்டிருக்கிற லிஸ்டில் பிரசாத் ஸ்டுடியோவும் சேர வேண்டும் என்று நான் வெளியில வந்துவிட்டேன். வெளியில் வந்த நான், சொந்த உழைப்பில் சம்பாதித்தப் பணத்தில் இந்த இடத்தை வாங்கி புதிய ஸ்டூடியோவை ஆரம்பித்திருக்கோம்'' என்றார்.   

 

சார்ந்த செய்திகள்