Skip to main content

சிதம்பரம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Health Minister inspects Chidambaram Hospital


 
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசரசிகிச்சை, ரத்தவங்கி, பொதுவார்டு, ரத்தப் பரிசோதனை மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இதன்பிறகு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கியுள்ள வார்டுக்கு சென்று அவர்களிடத்தில் நலம் விசாரித்தார். அப்போது கரோனா வார்டில் இருந்த பெண் ஒருவர் நல்ல சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சருக்கு நன்றி கூறினார்.


பின்னர் மருத்துவமனைக்கு, சிகிச்சை பெற்றுகொள்ளவந்த கர்ப்பிணி பெண்களிடம் கர்ப காலத்தில் அரசு வழங்கும் பணம் மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். அப்போது நல்லூர் பகுதியில் இருந்து வந்த கர்ப்பிணி விஜயலட்சுமி கர்ப காலாத்தில் அரசு கொடுக்கும் எந்தச் சத்தான உணவும் வழங்கவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவர் கூறும் தகவலை விசாரணை செய்ய உத்திரவிட்டார்.

 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா தொற்றுக்கு சிறப்பான சிகிச்சையை சிதம்பரம் அரசு மருத்துவமனை செய்துள்ளது. அதே நேரத்தில் கரோனா தொற்று ஆரம்ப காலத்தில் தனியார் மருத்துவமனைகள் இல்லாதநேரத்தில் இருந்து தற்போது வரை தொற்று பாதித்த 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பு பணியைப் பாராட்டுகிறேன்.” என்றார்.

 

சிதம்பரம் பகுதியில் கரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களை எரிப்பதற்கு ரூ 9 ஆயிரம் வசூல் செய்வதாக நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அமைச்சர் அனைத்து செய்தியாளர்களிடமும் கேமராக்களை ஆஃப்செய்ய கூறிவிட்டு சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை அழைத்து அரசு செலவில் இறுதிச் சடங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்கு அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

 

Ad


அதேபோல் தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உயிரைப் பணயம் வைத்து ஒரு நாளைக்கு ரூ, 200 கூலிக்காக தொற்று காலத்தில் கரோனா வார்டில் ஏற்படும் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்சன்டிவ்தான் ரூ.200 கொடுக்கிறோம், தினக்கூலி எவ்வளவு கொடுக்கிறோம் என்று கூறாமல் மழுப்பாலான பதிலைக் கூறி கிளம்பிவிட்டார்.  

 


 

சார்ந்த செய்திகள்