Skip to main content

தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம்! - எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு!

Published on 26/06/2018 | Edited on 26/06/2018


தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

 

 

முன்னதாக, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் அமைந்துள்ள அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மீனவர் எடிசன் என்பவர் தோட்ட பகுதியில் கழிவுநீர் தொட்டியமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது முதலில் இரண்டு கருப்பு நிறபெட்டிகள் இருந்தன.
 

 


இதை பார்த்த எடிசன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை அந்த பெட்டியை ஆய்வு செய்த போது அதில், ஏகே.47 ரக துப்பாக்கி தோட்டாக்கள், நாட்டு வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், பைபர் படகு உதிரிபாகங்கள் ஆகியவை அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் அந்த இடம் 30 ஆண்டுகளுக்கு முன் விடுதலை புலிகள் பயிற்சி பெற்ற இடம் எனவும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் விடுதலை புலிகள் இலங்கை உள்நாட்டு போரில் ஈடுபட்டபோது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

h raja


இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதவில்,

இராமேஸ்வரத்தில் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவர் வீட்டில் தோண்டத் தோண்ட நவீன ஆயுதங்கள். தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். உளவுத்துறைக்கு சவால் என கூறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்