Skip to main content

தூசு தட்டும் 'குட்கா' வழக்கு- தமிழக அரசின் அனுமதிக்கு காத்திருக்கும் சிபிஐ!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

'Gutka' case - CBI waiting for permission from Tamil Nadu government!

 

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. மாதவராவ் குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

 

தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றிய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கும் தொடர்ந்தது. மேலும் 246 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டது. மூன்று அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது சிபிஐ இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிபியை முடிவு செய்துள்ளது.

 

மாநில அரசிடம் அனுமதி பெற்றே வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு  சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்