Skip to main content

கொடநாடு சம்பவங்கள் ஹாலிவுட் திரில்லர் படம் போல் உள்ளது! ஜி.ராமகிருஷ்னண் 

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
gr

 

திண்டுக்கல் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும்போது,   தமிழகத்தின் சார்பாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசியல் நோக்கம் கொண்டது.  2015ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இரண்டரை லட்சம் கோடிக்கு மூலதனம் ஒப்பந்தம் கிடைத்து விட்டதாக மாநாட்டில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் வந்தது 68,000 கோடி தான்.  இது போல தான் இதுவும்.  இப்போது மூன்றரை லட்சம் கோடி வரும் என்று கூறப்படுவதை எப்படி நம்பமுடியும்.  பாராளுமன்ற தேர்தலை ஒட்டி ஒரு அரசியல் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

 

  பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் எதிர் கட்சிகளுக்கு இடையில் ஒரே மாதிரியான அணி உருவாக வாய்ப்பில்லை ஆனால் பாஜகவை தோற்கடிப்பதற்காக பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கக் கூடிய அடிப்படையில் மாநில அளவில் அணி அமைய வாய்ப்புள்ளது.   


கோடநாடு எஸ்டேட்டில் காவலர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கார் விபத்தில் மரணம் போன்ற சம்பவங்கள் ஹாலிவுட் திரில்லர் படம் போன்று உள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.   எனவே அவர் பதவி விலக வேண்டும்.   நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறினார் பேட்டியின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட பொருப்பாளர்கள் சிலர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்