Skip to main content

திருவாரூரில் அஞ்சல் துறை ஊழியர்களுக்கு பரிசு!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

திருவாரூரில்  அஞ்சல் துறையின் வணிக வளர்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட தபால் ஊழியர்களுக்கு திருச்சி மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அம்பேஷ் உபமன்யு பரிசுகள் வழங்கி கெளரவபடுத்தினார்.

 

திருவாரூரில், நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்திற்கான 2018 - 19 ஆண்டுக்கான வணிக வளர்ச்சி சீராய்வு முகாம் தமிழ்நாடு அஞ்சல் மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அம்பேஷ் உபமன்யு தலைமையில் நடைபெற்றது.

 

post office

 

இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கான எஸ்.எஸ்.ஏ சேமிப்புக் கணக்கு புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் வணிக வளர்ச்சியில் சிறப்பாகபணியாற்றிய தபால் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார் .

 

இதனை தொடர்ந்து மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அம்பேஷ் உபமன்யு கூறுகையில், "திருவாரூர், நாகை தலைமை தபால் நிலையங்கள் மற்றும் காரைக்கால், நன்னிலம், கீழ்வேளூர் உள்ளிட்ட 31 தபால் நிலையங்களில் ஆதார் சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் "என கேட்டுகொண்டார் .

 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி அஞ்சல் உதவி இயக்குனர் குஞ்சிதபாதம். நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன். உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்